Tuesday, November 16, 2010

விண்வெளிப் பயணம்

விண்வெளிப் பயணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: 
விண்வெளிப் பயணம் பற்றிய எண்ணக்கரு அல்லது, விண்வெளிக்கு மனிதனையோ, வேறு பொருட்களையோ அனுப்பும் எண்ணம், இது உண்மையிலேயே சாத்தியமாகுமுன், அறிவியற் கட்டுக்கதைகளிலே, பலரால் கையாளப்பட்டுள்ளது. இந்த ஆக்கங்களுட் சில அச்சொட்டாக எவ்வாறு இது செய்யப்படுகிறது என்று விபரமான விளக்கங்களையும் உள்ளடக்கியிருந்தன. 20 ஆம் நூற்றாண்டில், போதிய அளவு உந்துசக்தித் தொழில்நுட்பம், வலுவானவையும், பாரங்குறைந்தனவுமான பொருட்கள், மற்றும் தொடர்புள்ள தொழில்நுட்பங்களினதும், அறிவியலினதும் வளர்ச்சி காரணமாக, விண்வெளிப்பயணம் சாத்தியமாகக்கூடிய ஒன்றாகியது.
1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் திகதி, ரஷ்யா ஆளில்லாத விண்கலமான ஸ்புட்னிக் I இனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. பூமியைச் சுற்றிச் செலுத்தப்பட்ட விண்கலமொன்றில், முதன்முதலில் விண்வெளிக்குச் சென்ற மனிதன், யூரி ககாரின் என்பவராவார். இவரைச் சுமந்து சென்ற கலமும், 1961 ஆம் ஆண்டு ஏப்ரலில் ரஷ்யாவினாலேயே அனுப்பப்பட்டது.